Description
முதல் தலைமுறை தலித் அறிஞரான சூரஜ் யங்டே அழுத்தமான உணர்ச்சிகளைத் தூண்டும் இந்தப் புத்தகத்தின் வழியே ஆழமான சாதிய நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதோடு அவற்றின் குழப்ப முடிச்சுகளையும் அவிழ்க்கிறார். தலித் குடியிருப்பில் வளர்ந்த அவர் நெஞ்சைப் பதற வைக்கும் பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அன்றாட வாழ்வின் வலிகளையும் துன்பங்களையும் அன்பு மற்றும் நம்பிக்கையால் தாம் மீட்டெடுத்ததை விவரிக்கிறார். அரசியல், அதிகாரத்துவம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் நிலைகொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத சுவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். தலித் சமுதாயத்தினரிடையேயான உட்- சாதிப் பிரிவுகள், பிளவுகள், உயரடுக்கு தலித்துகளின் நடத்தை மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட நவீன-உலகின் தீண்டாமை போன்றவற்றைத் தைரியமாக, நேர்மையாக முன்வைக்கிறார் – அவை அனைத்தும் பிராமணீய கோட்பாடுகளின் தவிர்க்க இயலா செல்வாக்கின் கீழ் இயங்குகின்றன.
– புத்தகத்தில் இருந்து
Reviews
There are no reviews yet.