Description
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஓர் இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலை பதினேழு சமகால எழுத்தாளர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
– அ. மார்க்ஸ்
இந்த தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வின் கண்ணாடிப் பிரதி. இதன் வழியே இந்த இருண்ட காலத்தை எல்லோரும் உணர முடியும். அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காய் ஒரு விசையை அளிப்பதற்கான முன்னெடுப்பே இந்தத் தொகுப்பின் முயற்சி.
















Reviews
There are no reviews yet.