Description
மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)
மீனவர்களில் படித்தவர்க்கும், பணியிலிருப்போர்க்கும், பிறப்புரிமைக் காரணம் காட்டி மீன்துறை மற்றும் கடலியல் துறையில் பணியில் இருப்போருக்கும் இல்லாத அக்கறை அவருக்கு இருப்பதாலேயே, அதை நன்றியோடு பதிவு செய்கிறேன். மீனவ சமூக வாழ்வும் அதன் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கப்படும் போதெல்லாம் இவரது பதிவுகளைக் காண நேரிடுகிறது. நானறிய நடந்தேறியிருக்கும் இவ்வனிச்சையான செயல்பாடும், பெரும் ஆய்வுக் கண்ணோடும் அக்கறையோடுமே செய்யப்பட்டிருக்கின்றன. சரக்கு நடைசெய்யும் வணிகக் கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள் அவற்றின் செயல்பாடுகள் வேறு, மீன்பிடித்தலில் இருக்கும் பாரம்பரியப் படகுகள், விசைப்படகுகள், மற்றும் கப்பல்களின் செயல்பாடுகள் வேறு. மீன்பிடித்தலில் கரைக்கடலில் இயங்கும் பாரம்பரிய மீனவர்களுக்கும், ஆழ்கடலில் கப்பல் வைத்து மீன்வேட்டம் செய்யும் வணிக மீனவர்களுக்கும் வாழ்க்கை முறை பாரதூரமானது. இவர்களுக்கு இடையே விசைப்படகு மீனவர்களும் அவர்களது அண்மைக் கடல் செயல்பாடுகளும்… இவர்கள் அனைவரையும் ஒரே சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதென்பது, தொடரும் தொழில்சார் புரிதலற்ற அரச அதிகாரத்தின் அடக்குமுறையாகவே படுகிறது.
– புத்தகத்தில் இருந்து
Reviews
There are no reviews yet.