Description
ஒரு தோற்றப்பாட்டியல் வாசிப்பு
ராமாநுஜத்தின் அணுகுமுறையானது தீர்வை நோக்கி நகரும் முனைப்பை கொண்டிராமல் வெவ்வேறு சாத்தியங்களைப் பரிசீலிக்கவே முற்படுகிறது. அவர் விவாதிக்க எடுத்துக்கொள்ளும் உள்ளடக்கம் என்ன மொழியை, அணுகுமுறையை. வாதமுறையைக் கொண்டிருக்கிறதோ அதற்குள்ளாக இருந்து விவாதிக்க விரும்புகிறார். இப்படியான எல்லையை வகுத்துக்கொண்டிருப்பது அவரைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விதவிதமான பாதைகளைத் திறந்துவிடுவதாக இருக்கிறது. மேலும் குடும்பம், சமூகம், பண்பாடு, அறிவியல், இலக்கியம், சினிமா. மொழி என எதுவாக இருந்தாலும், அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள முற்படும் ராமாநுஜத்தின் கருத்தாக்கத் தளமானது நடைமுறைத் தளத்திலிருந்து விலகிய பண்பைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அன்றாடத் தன்மையை வலியுறுத்தும் அக்கறையைக் கொண்டிருக்கிறது. கருத்தாக்கத்தை முன்னகர்த்திச்செல்வதற்காக நடைமுறையை வளைக்கும் எத்தனமும் அவரிடம் வெளிப்படவில்லை. வாழ்வனுபவங்களிலிருந்து அந்நியப்பட்டுப்போவதை அனுமதிக்கவும் இல்லை. அதனால்தான், கருத்தாக்கத் தளத்துக்கு நகரும் வாழ்வனுபவங்கள்கூட உணர்வுபூர்வ அம்சத்தை இழந்துவிடாமல் ஈரத்தை அப்படியே தேக்கிவைத்திருக்கின்றன. விளைவாக, ராமாநுஜத்தின் கட்டுரைகளை வாசிப்பதென்பது புனைவிலக்கிய வாசிப்பைப் போல் சுவாரஸ்யமான அனுபவம் தருகிறது. தமிழ் அல்புனைவு வரலாற்றில் இந்தப் புத்தகம் ஒரு மைல்கல்.
– த.ராஜன்
‘பழைய குருடி’ நூலாசிரியர்
Reviews
There are no reviews yet.