Skip to content

காற்றின் உள்ளொலிகள்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

₹400.00

தமயந்தியின் 'காற்றின் உள்ளொலிகள்' சிறுகதைத் தொகுப்பு! காயப்பட்ட ஆன்மாவின் துயரத்தை உணர்த்தும் கதைகள்.

Category Short Story
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2021
Format Paperback

Description

மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு நிலைமை சீர்பெறும் வரைக்கும், தமயந்தியும் என்னை உள்ளிட்ட வாசகர்கள் யாவரும் ரத்த சாட்சிகளாக மட்டுமே இருக்க முடியும்.வாசகர்கள் ஒரு முக்கியமான எழுத்துக் கலைஞரோடு கைகுலுக்கப் போகிறார்கள். மிகவும் அருமையான தருணங்களை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்.- எழுத்தாளர் பிரபஞ்சன்