Skip to content

நமது சூரியக் குடும்ப ஆராய்ச்சி வரலாறு

₹340.00

சூரியக் குடும்பம் மற்றும் பிரபஞ்சம் குறித்த எளிய அறிமுகம்! அ. சோழராஜன் எழுதிய இந்த நூல், மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் ஏற்றது.

Category Report
Publisher நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2025
Format Hardcover
Tags Astronomy , Cosmology , Science

Description

நமது பிரபஞ்சத்தின் எல்லையை இன்னமும் விஞ்ஞானிகளால் அளவிட முடியவில்லை. அது விரிவடைந்து கொண்டே போகிறது.புதிய புதிய நட்சத்திர மண்டலங்கள் (கேலக்ஸி) உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய நட்சத்திர மண்டலங்கள் மரணமடைகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியில் தொடங்கிய பெரு வெடிப்பு இன்றைய மாபெரும் அண்டவெளியாக பரந்திருக்கிறது.யோசிக்கவே மலைப்பாக இருக்கும் நமது பிரபஞ்சம் எப்படி உருவானது? கேலக்ஸிகள் என்றால் என்ன? அவை எத்தனை விதமாக இருக்கின்றன? கேலக்ஸிகளுக்குள் எத்தனை சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன? பிரபஞ்சத்திற்குள் எத்தனை கேலக்ஸிகள் இருக்கின்றன? என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி எல்லோரும் படிக்கும் வகையில் எளிமையாக இந்த நூல் விளக்குகிறது.