மகாநதி
₹240.00
பிரபஞ்சன் எழுதிய 'மகாநதி' நாவலில் வாழ்க்கையின் பேரழகையும், உணர்ச்சிகளின் ஆழத்தையும் அனுபவியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா?நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே இந்த நாவல்.- பிரபஞ்சன்
