ஜெஃப் பெசோஸ் (The Boss)
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வாழ்க்கை வரலாறு! தொழில்முனைவோருக்கு ஒரு உத்வேகம்.
| Category | Biography |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Biography , Business , Entrepreneurship |
Description
தினத்தந்தியின் ஆசிரியர் யாரென்று கேட்டால் எத்தனை பேரால் பதிலளிக்க முடியும்? ஆனால் தினத்தந்தியைத் தெரியாத தமிழர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படித்தான் ஜெஃப் பெசோஸும் அமேசானும்.அமேசான் செயலி இல்லாத மொபைல் போன்கள் அநேகமாக உலகில் இருக்க வாய்ப்பில்லை. விரல் நுனியில் வேண்டிய அனைத்தையும் ஆணையிட்டு அடைவதற்கு அதுதான் முதன்மை வழியாக இன்றுள்ளது. எப்படி அமேசான் இதைச் சாதித்தது? என்றால், அமேசான் என்கிற மாயக் கற்பகத் தருவைக் கற்பனையில் கண்டெடுத்து வடிவம் கொடுத்த பெசோஸின் தரிசனமும் தீர்க்கதரிசனமுமே இதன் அடித்தளம்.இந்நூல், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இன்றைய தலைமுறையின் விருப்பங்களோடும் தேவைகளோடும் தனது சிந்தனைப் போக்கை ஒருங்கிணைத்து வடிவமைத்துக்கொண்ட ஒரு மாபெரும் தொழிலதிபரின் சிந்தைக்குள் நம்மைச் சுற்றுலா இட்டுச் செல்கிறது.செய்யும் தொழில் எதுவானாலும் வெற்றியை மட்டும் விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும்.
