Skip to content

சாதனை சாத்தியமே! வாங்க சாதிக்கலாம்…

₹180.00

பெண்களின் வெற்றிக் கதைகள் மூலம் உத்வேகம் பெறுங்கள்! லதானந்தின் 'சாதனை சாத்தியமே!' புத்தகம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

Category Essay
Publisher சத்யா எண்டர்பிரைசஸ்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Biography , Self-Improvement , Women's History

Description

சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில், பாலினப் பாகுபாட்டுத் தடைகளைத் தகர்த்தெரிந்துவிட்டு சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைத்த இந்தியப் பெண்கள் சிலரின் வெற்றிக் கதைகளை இந்த நூல் விவரிக்கிறது. முயற்சியும் பயிற்சியும் சோர்ந்து போகாத தன்னம்பிக்கையும் இருந்தால் நாமும் சாதிக்கலாம் என்ற எண்ணம் இந்த நூலைப் படிக்கும் அனைவருக்கும் - குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் என உறுதியாக நம்பலாம். அபாயகரமான விலங்குகளைக் கையாள்வதாகட்டும், கடுங் குளிர் நிலவும் அன்டார்டிகா பகுதியில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதாகட்டும், எண்பது வயதைக் கடந்தபோதும் இன்னும் வியத்தகு பணிகளில் ஈடுபடுவதாகட்டும், உடற் குறைகளைப் புறந்தள்ளி ஓங்கு புகழ் பெற்றதாகட்டும். வாட்டுகின்ற வறுமைச் சூழலிலும் அயர்ச்சியடையாமல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதாகட்டும் விண்வெளிப் பயணங்களில் வெற்றிக் கொடி நாட்டுவதாகட்டும் எனப் பெண்கள் தகத்தகாயமாக ஜொலித்த வரலாறுகள் இந்த நூலில் பேசப்படுகின்றன.ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளில் அசராமல் ஈடுபட்டு முத்திரை பதித்த பெண்கள் அந்த நிலையை அடையப் பட்ட பாடுகள், எதிர்கொண்ட இன்னல்கள் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன.சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டிய நூல் இது. தங்கள் குடும்பத்து மகளிரும் நாடு போற்றும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பும் ஆண்களும் அவசியம் படியுங்கள்.சாதிப்பது என்பது ஒரு சிலரின் தனி உரிமை அல்ல; அது பொதுவானது. உங்களுக்குமானது அது!