Skip to content

இந்திய அரசியல் திட்டம்

₹235.00

இந்திய அரசியல் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? மா. இளஞ்செழியன் எழுதிய புத்தகம் அவசியம்!

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Constitutional Law , Indian Politics , Political Science

Description

அரசியல் திட்டம் என்றால் என்ன? ஒரு ஜனநாயக நாட்டில் அதற்குத் தரப்படவேண்டிய சிறப்பிடம் யாது? தற்கால அரசியல் உலகில் அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? என்னென்ன பண்புகள் அமைந்ததாயிருந்தால் ஓர் அரசியல் திட்டம் சிறந்த திட்டம் - என்று கொள்ளப்படும்? இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய அரசியல் திட்டத்தில் அந்தப் பண்புகள் யாவும் அமைந்துள்ளனவா? அமையவில்லை என்றால் அப்படி அமையாததனால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? இந்தப் பிரச்சினைகள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில் தெளிவான முறையில் அலசி ஆராயப்பட்டிருக்கின்றன.புதிய இந்திய அரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்டநாள் முதலாக, இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சமுதாய இயல் பொருளியல் ஆகிய துறைகளிலே எந்தப் பிரச்சினை தோன்றினாலும், உடனடியாக, அந்தப் பிரச்சினையைப் பற்றி அரசியல் திட்டம் என்ன கூறுகிறது என்பதைக் கண்டறிய வேண்டியது மிகமிக இன்றியமையாததாகிவிட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு இந்தியாவின் பொதுவாழ்வைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசியல் திட்டத்திற்குத் தரப்பட்டுவிட்டிருக்கிறது. எனவேதான். இன்றைய அரசியல் திட்டத்தின் பண்புகளை ஆராய்ந்து அறிவிக்கும் இந்தப் புத்தகம் தமிழுலகத்திற்கு மிகவும் பயன்படும் என்று நான் நம்புறேன்.-புத்தகத்திலிருந்து