பண்டை கிரேக்கம்
பண்டை கிரேக்கம் பற்றிய வரலாற்று அறிக்கை! கிரேக்க நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சாரத்தை ஆராய்க.
| Category | Report |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Ancient Greece , History , Political Science |
Description
பண்டை நாட்களில், விடுதலை வேட்கையுணர்ச்சியும். கருத்துக்களும் கிரேக்க நாட்டில் ஊற்றெடுத்ததைப்போல வேறு எங்கும் ஊற்றெடுத்ததில்லை. ஆழ்ந்த சிந்தனைக்கும், அமைதியான விவாதத்திற்கும் பிறகு, பெரும்பான்மையரின் வாக்கெடுப்பின்மூலம், அரசியல்-உலகியல் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதுபோன்ற கிரேக்கநாட்டுப் பழக்கம். இந்தக் காலத்து ஜனநாயக முறைக்கு அடிப்படையாகும்.இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய சீரிய அரசியல் அமைப்பு முறை கிரேக்கத்தில் நிலவிற்று என்பதை எண்ணும்போதும், வியப்புணர்ச்சிகொண்டு மகிழ்வுறாமல் இருக்கமுடியாது.வீண்பெருமை, பொறாமை, ஆதிக்கம் செலுத்தும் ஆசை, செல்வம் திரட்டும் ஆவல், வெறுப்புணர்ச்சி, சுயநலத்துக்காகக் காட்டிக்கொடுத்தல் ஆகிய இவற்றின் காரணமாகக், கிரேக்க அரசுகள் ஒன்றோடொன்று ஓயாமல் போரிட்டுக்கொண்டிருந்ததாலும், சிறிய ஆசியா, பாரசீகம், மாகிடோனியா போன்ற நாடுகளின் படையெடுப்புகளை அடிக்கடி சமாளிக்க வேண்டியிருந்ததாலும் கிரேக்க நாட்டில் ஒரேசீரான-அமைதியான வளர்ச்சி ஏற்பட இடமில்லாமற்போயிற்று:இல்லையாயின், உலகிற்குத் தந்துள்ள அறிவொளி இன்னும் எவ்வளவோ சிறப்புடையதாகக் காணப்பட்டிருந்திருக்கும்!-புத்தகத்திலிருந்து
