Skip to content

சவுரிக் கூந்தல்

₹375.00

சவுரிக் கூந்தல்: நாவிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஜில்லேள்ள பாலாஜியின் சிறுகதைத் தொகுப்பு. சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் கதைகள்!

Category Short Story
Publisher அகநி வெளியீடு
Language Tamil
Year 2026
Format Paperback

Description

சவரம் செய்து பிழைப்பு நடத்தும் நாவிதர்களின் வாழ்க்கையிலுள்ள வேதனைகளும், துயரங்களும் எப்போதுதான் முடிவுக்கு வரும்? மங்களகரமான சுபகாரியங்களுக்கு மேளம் வாசித்து ஜீவிக்கும் மேளக்காரர்களின் வாழ்க்கையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளும், முட்டுக்கட்டைகளும் எப்போது விலகும்?மனிதனின் இதயத்திலிருந்து மனிதநேயம் எப்படி மறைந்து போகிறது - கருணையும் இரக்கமும் எப்படி காணாமல் போய், மனிதன் சக மனிதனிடமிருந்து எவ்வாறு தூரத்திற்குத் தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதெல்லாம் அறுதியிட்டு விவரிக்க முடியாதவை.மொழி, இனம் கடந்து நாவிதர்களின் வாழ்வு ஒடுக்கப்பட்ட வாழ்வாக இருப்பதை, தெலுங்கு எழுத்தாளர் ஜில்லேள்ள பாலாஜி எழுதியுள்ள 9 கதைகளின் வழியாக உணர முடிகிறது. நாவிதர்களின் வாழ்வைப் பேசும் கதைகள் தனித் தொகுப்பாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை.தெலுங்கிலிருந்து தமிழுக்கு ருத்ர துளசிதாஸ் எனும் இளம்பாரதி மொழிபெயர்த்துள்ளார்.