இதுவும் கடந்து போகும்
பிறப்பு முதல் இறப்பு வரை கவலையின்றி வாழ்வதற்கான வழிகாட்டி
கவலைகள், பயம் இல்லாமல் வாழ வழிகாட்டும் 'இதுவும் கடந்து போகும்' புத்தகம். பால் சுயம்புவின் சுயமுன்னேற்ற வழிகாட்டி!
| Category | Essay |
|---|---|
| Publisher | தினத் தந்தி |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Psychology , Self-Help |
Description
மனிதர்களான நாம் ஒவ்வொருவரும் எதற்காக பிறந்திருக்கிறோம், இ்ந்த பிறப்பின் மூலம் நாம் எதை எல்லாம் செய்யப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எவ்வளவு காலம் - எப்படி வாழ்வீர்கள் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியுமா? ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ படைக்கப்பட்ட நீங்கள் மகிழ்ச்சியின்றி, மனநிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க என்ன காரணம்? அத்தனைக்கும் இந்த புத்தகத்தில் விடை இருக்கிறது.புன்னகை முகமாய் வாழ வேண்டிய உங்களை தினமும் புலம்பலோடு வாழவைப்பது எது என்பது உங்களுக்கே தெரியும். தொடர் தோல்வி, நஷ்டம், தீராத மனக்கவலை, தாங்க முடியாத அவமானம், உறவுச்சிக்கல்கள், துரோகங்கள், நோய், முதுமை, மரண பயம் போன்ற ஏதாவது ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதனால் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாமல் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.இப்படிப்பட்ட எந்த பயமும், கவலையும், கண்ணீரும் இன்றி நிம்மதியாக, மனநிறைவோடு, தைரியமாக உங்களால் வாழ முடியுமா?நிச்சயம் முடியும்! அதற்கான அத்தனை வழிமுறைகளையும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பால்சுயம்பு இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார். இதன் மூலம் இன்றைய வாழ்க்கையில் இருக்கும் பயம், பதற்றம், கவலைகள் நீங்கி தெளிவும், மனதைரியமும் பிறக்கும். எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனோசக்தி அதிகரிக்கும். இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒருவகையில் ஒத்துப்போகும். உங்கள் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் கிடைக்கும். அதனால் உங்களை மீண்டும் மீண்டும் இந்த புத்தகம் படிக்கத்தூண்டும்.
