ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி… (எழுத்து பிரசுரம்)
அரசியல் கட்டுரைகள்
சாரு நிவேதிதாவின் ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு! அதிகார வன்முறைக்கு எதிரான ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Political Criticism , Politics , Tamil Nadu Politics |
Description
தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை.தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
