அறிவியல் துளிகள்
வியக்கவைக்கும் அறிவியல் செய்திகளின் தொகுப்பு
வியக்கத்தக்க அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் அறிய! 'அறிவியல் துளிகள்' புத்தகம் உங்கள் அறிவை மேம்படுத்தும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கௌரா பதிப்பகக் குழுமம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Education , Nature , Science |
Description
நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களில். உலோகங்களில். இயற்கையில் என அனைத்திலும் அறிவியல் செய்திகள் நிறைந்திருக்கின்றன. இந்த அறிவியல் செய்திகளைச் சிறுவர்களுக்கும் விளங்கும் வகையில் சுவைபட எடுத்துக்கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.பளிச்சென்று இருக்கும் பாட்டில் மூடி, அலுமினியத்தகடு போன்றவற்றை எல்லாம் தூக்கிச் சென்று அவற்றோடு சலிக்கும்வரை விளையாடும் பறவை. மரம் ஏறும் பறவை. வாத்து போல் உள்ள காகம். மீனை வேட்டையாடும் மஞ்சள் நாரை, தண்ணீரில் ஸ்கூட்டர் ஓட்டும் பூச்சி, முகக் கவசம் அணிந்திருக்கும் தட்டான் பூச்சி, இசைக்கச்சேரி நடத்தும் பூச்சி. உயிர்காக்கும் உலோகம், ஆகாய விமானத்துக்கு ஆகாத உலோகம். டைனோசர்களை அழித்த உலோகம் என இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? இப்படிப் பல வியக்கத்தக்க அறிவியல் செய்திகளைத் தான் இந்நூல் இருபத்தைந்து சிறுசிறு கட்டுரைகளாக்கி வழங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வினாவோடு துவங்கி, அதைப்பற்றிய பல செய்திகளைக் கூறிய பின். அக்கட்டுரையின் இறுதியில் விடை கூறும் வகையில் அமைந்துள்ளது.
