Skip to content

பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1)

₹275.00

பங்குச்சந்தை பற்றித் தமிழில் முழுமையான முதல் நூல்! அடிப்படை விஷயங்களை எளிதாகப் புரிந்து கொண்டு லாபம் ஈட்ட வழிகாட்டி.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2005
Format Paperback
Tags Finance , Investment , Stock Market

Description

பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்? இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்னஉதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.