Skip to content

கம்பரின் ஏரெழுபது

₹75.00

கம்பரின் ஏரெழுபது நூலுக்கு உமையவன் எழுதிய உரை! இந்த உரை, அந்நூலை உலகோர் அறியச் செய்கிறது.

Category Literary Criticism
Publisher மணிவாசகர் பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Classical Tamil , Literary Analysis , Tamil Literature

Description

இருபத்தேழு வயதில் இலக்கிய உலகின் இமயத்தை எட்டிப்பிடிக்க முயல்கின்ற சாதனை இளஞ்சுடரை வியந்து வாழத்துகிறேன். கவிஞர். ஆய்வாளர், சிறுகதை எழுத்தாளர், இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் என்று பன்முகம் கொண்ட பண்பாளர், உமையவரை உளமாரப் பாராட்டுகிறேன். விடிவெள்ளியாக உமையவன் தோன்றி இருக்கிறார். நற்தொண்டு ஆற்றும் உமையவன் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு. இந்த இளம் வயதில் ஒரு பழைய இலக்கியத்திற்கு உமையவன் உரை எழுதியிருப்பது அவருடைய பன்னூல் பயிற்சியை வெளிப்படுத்துகிறது. இந்த நூலுக்கு எழுதியுள்ள உரை மிகமிக அழகு எளிய தமிழில் எழுதியுள்ளது சிறப்பு. மறைந்து கிடந்த ஏர் எழுபது நூலுக்கு உரை எழுதி அந்நூலை உலகோர் அறியுமாறு செய்துள்ள உமையவன் வாழ்க! வாழ்க!செந்தமிழறிஞர் சிலம்பெணி சு. செல்லப்பன்கவிஞர் உமையவன். விவசாய குடியைச் சேர்ந்தவர். வேளான்மையின் வீரியம் உணர்ந்தவர். அது பற்றி நிறையப் பேசியும் எழுதியும் வருபவர். அதனாலேயே தம்மை 'உழவுக் கவிஞர்' என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுகிறவர். இந்த நூலுக்கு ஒரு கூடுதல் தகுதி உரையாசிரியர் 'உழவர்' என்பது, அதனால் தொழிலின் நுட்பங்கள் உணர்ந்து புதிய கருத்துக்களையும் சேர்த்துள்ளார். உழவுத்துறைக் கலைச் சொற்களுக்கான உரிய பொருளும் அவரால் மிகச் சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. கவிஞரின் முயற்சி பாராட்டுக்குரியது.ஒவியக்கவிஞர் மலர்மகன்