போரும் வாழ்வும்
மூன்று தொகுதிகள்
லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு! வரலாற்றின் சுழற்சியில் மனித வாழ்வின் முழுமையை உணர்த்தும் காவியம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
தல்ஸ்தோயின் பெரும் நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக் கூடியது அது. அதில் உள்ளது வாழ்வின் ஒரு பெரும் அலை. வரலாற்றின் ஒரு சுழிப்பு. நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு சுழிப்பில் எத்தனை எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப்படுகின்றன, உறவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன, அழிவும் ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் தல்ஸ்தோய்.சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பு மிகசரளமானதும் கச்சிதமானதுமாகும். அவர் காலத்திய படைப்பிலக்கியவாதிகளின் மொழி நடைகள் பழகித் தூசி படிந்து விட்டபிறகும் இந்த மொழிபெயர்ப்பு நடை புதுமை மாறாமல் இருப்பது வியப்புத் தருவது. ஆசிரியரின் மொழித் தேர்ச்சியைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் மொழிபெயர்ப்பாளரின் மொழிப் பயிற்சி மட்டும் காரணமல்ல. மொழி பெயர்ப்பாளருக்கு படைப்பு மீதிருந்த காதலும் முக்கியமான காரணம். இல்லையேல் இந்த இரண்டாயிரம் பக்கங்களை ஒருவர் மொழி பெயர்த்துவிட முடியாது.
