Skip to content

லத்தீன் அமெரிக்காவில் நம்பிக்கைக் கீற்று

₹200.00

லத்தீன் அமெரிக்காவில் சோசலிசத்தின் எழுச்சி மற்றும் ஊகோ சாவேஸின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher பன்மை வெளி
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Latin American History , Politics , Socialism

Description

"இருபத்தொன்றாம் நூற்றாண்டு சோசலிசம் என்று முதன் முதலில் வெனிசுவேலாவின் குடியரசுத் தலைவர் ஊகோ சாவேஸ் 2004 ஆம் ஆண்டு "லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாதிரி" யான 'ஆல்பா'வை உருவாக்கியபோது குறிப்பிட்டார். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தோல்வியை அங்கீகரித்து, பங்கேற்பு ஜனநாயகத்தை நோக்கி அவர் தனது நாட்டை நகர்த்தினார். இறுக்கமான அரசுக்கு மாற்றாக நெகிழ்வான, கீழிருந்து கட்டப்படும், மக்கள் மன்றங்களால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பை உருவாக்கி, செயல்படுத்திக் காட்டி, பிற நாடுகளுக்கும் வழிகாட்டினார்.பொலீவார் திட்டமிட்டபடி வட அமெரிக்க நுகத்தடியிலிருந்து விடுபட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருங்கிணைவதற்காக பெரும் பொருள் முதலீடு செய்து பரஸ்பர சமூக வளர்ச்சிக்கான பொருளாதார, வர்த்தக, மேம்பாட்டு செயல்பாட்டுக்கென ஆல்பா, தெலி சூர், மெர்க்கோ சூர், பாங்கோ தெ சூர், செலாக் போன்ற தேவையான அனைத்துவகை அமைப்புகளையும் ஏற்படுத்தினார். அவர் எழுப்பிய இளஞ்சிவப்பு அலையின் போக்கில் இன்று பத்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சி அமைத்துள்ளனர்.