Skip to content

இரும்புப் பெட்டி

₹550.00

ஹோவர்ட் ஸ்விக்கெட் எழுதிய 'இரும்புப் பெட்டி' நாவலை வாங்கவும். அமெரிக்க-இந்திய கலாச்சாரப் பரிவர்த்தனையை சித்தரிக்கும் ஒரு சிறந்த படைப்பு!

Category Novel
Publisher பரிசல்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

அமெரிக்க-இந்திய கலாச்சாரப் பரிவர்த்தனைக்காகத் தொடங்கப்பெற்ற, பெர்ல் பப்ளிகேஷனின் ஒரு ஜனரஞ்சமான ஆனால் சீரிய அமெரிக்க நாவல். 'இரும்புப் பெட்டி'.ஹோவர்ட் ஸ்விக்கெட், பனிப்போர்க் கால அமெரிக்க இலக்கியத்தில், அதில் நேரடியாகப் பங்குபெறாமல், பல முக்கியமான வாழ்க்கை வரலாறுகளையும், நியூ ஜர்னலிசப் படைப்புகளையும் ஜனரஞ்சகமான நாவல்களையும் எழுதியவர். தொழிலாளர் அமைப்புகளைச் சீர்குலைத்து, வேலைநிறுத்தப்போராட்டங்களை அடக்கியாள அரசுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேலைசெய்த Pinkerton என்ற முன்னோடித் தனியார் உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து எழுதி வெளிப்படுத்தியவர்.அவரது புகழ்பெற்ற நாவலான "The Power and the Prize' திரைப்படமாகவும் வந்தது. அதன் பின் தோன்றிய இந்த "The Strong Box' (இரும்புப்பெட்டி) நாவலும் அதைப் போலவே பெரும் வணிக நிறுவனங்களின் நடைமுறைசார்ந்த நல்லதுகெட்டதுகளைத் துல்லியமான பாத்திரவார்ப்புகள், சாவதானமான காட்சிச் சித்தரிப்புகள் கொண்டு படைத்துக்காட்டுகிறது. இது ஒருவகை Kleptopia நாவல்.சுதேசமித்திரனில் பணியாற்றிய R.ஸ்ரீநிவாஸன், தமிழ் இலக்கிய உலகில் அறுபதுகளின் பிற்பகுதியில் தோன்றிய மொழிபெயர்ப்புகளின் பொற்காலத்தைச் சேர்ந்தவர் ஹெமிங்வே, வில்லா காதர் போன்றோரின் புகழ்பெற்ற அமெரிக்க நாவல்களைத் தமிழாக்கியவர். நண்பரான தி.ஜானகிராமனின் 'மோகமுள்', சுதேசமித்திரனில் தொடராக வரவும் துணைபுரிந்தவர். தெளிவும் சரளமும் கொண்ட ஆற்றொழுக்கான நடை சீனிவாசனுடையது.