Skip to content

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி (பரிசல்)

₹320.00

சுப்ரமணிய அய்யர் எழுதிய 'தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி' நூலில் தமிழ் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறியலாம்.

Category Essay
Publisher பரிசல்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Linguistics , Literary Criticism , Research , Tamil Literature

Description

இந்த நூலில், பல விஷயங்களைப் பற்றி, புதிதாக நானாகவே ஆராய்ச்சி செய்திருப்பதாக ஒருவரும் கருதக் கூடாது. மற்றப் புலவர் செய்திருக்கும் தமிழ் ஆராய்ச்சியே இந்த நூலுக்குப் பொருள். ஒரு பொருளைப் பற்றிப் பல புலவர்.வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தால் அவைகளில் எது பொருந்தமானது என்று எனக்குத் தோன்றியதோ அதைக் காரணங் கூறி விளக்கியிருக்கிறேன். தவிரவும் பிறகுடைய அபிப்பிராயங்களில் சிக்கல்களோ முரண்பாடுகளோ இருந்தால், அவைகளைப் பரிசீலனை செய்து ஆங்காங்கே எனது கருத்தைத் தெரிவிக்க முயன்றிருக்கிறேன். இந்த அளவில் தான் எனது ஆராய்ச்சி நிற்கும்.எந்தக் காலத்திலும் எந்த விஷயத்தைப் பற்றியும் மற்றத் துறைகளில் இருப்பது போல, இலக்கிய ஆராய்ச்சித் துறையிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு, ஆதலால் இந்த நூலில் கூறப்பெற்றிருக்கும் பல அபிப்பிராயங்களையும், கட்டப்பெற்றிருக்கும் சில முடிபுகளையும் எல்லாத் தமிழ் அறிஞகும் ஏற்றுக் கொள்வர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கும் எல்லோரையும் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது என்பதும் அவர்களுடைய கருத்துக்களைத் தனித்தனியாக ஆராய்வது என்பதும் இயலாத காரியம்.இந்த முயற்சியில் நான் ஈடுபட வில்லை; எனது நோக்கத்திற்கு அது அவசியமும் இல்லை. ஆனால் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியை நான் எனது சிந்தனையில் பார்த்தபடி வரைந்திருக்கிறேன். ஆகையால் இந்த நூல் திறந்த மனமுடைய தமிழ் மாணவருக்கும் தமிழன்பருக்கும் பயன்படும் என்பது எனது நம்பிக்கை.