நினைவில் துடிக்கும் இதயம்
ப்ரியா பாஸ்கரன் எழுதிய 'நினைவில் துடிக்கும் இதயம்' கவிதைத் தொகுப்பு! உங்கள் மனதை வருடும் கவிதைகளுடன்...
| Category | Poetry |
|---|---|
| Publisher | பொள்ளாச்சி இலக்கிய வட்டம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
கவிதைகளுக்குத் தன்னைக் கொடுத்துவிடுகிற வாசக மனம், கவிதை மனம் எழுத்து மனமாக உருவெடுக்கும் அது பரிணாம வளர்ச்சி. தன் கூடுகளுடைத்து எழுத்துப்பறவையாகக் கிளம்பியிருக்கிறார் இந்தத் தொகுப்பின் வழி. அது தன் பால்யங்களுக்குள் நுழைந்து , குழந்தைமையை தரிசித்துவிட்டு , தனது உறவுகளை, அன்புநிறை மனதை, நமக்கு தரிசனமாகக் காட்டுகிறது- கவிஞர் இரா.பூபாலன், செயலாளர், பொள்ளாச்சி இலக்கிய வட்டம்ஒரு மலர்த்தோட்டத்தின் புன்னகை தன் மீது படரும் பொழுதில் தன் சிறகுகளில் அடைகாத்திருந்த அத்தனை வண்ணங்களைக் காலத்தின் வழித்தடத்தில் வரைந்துகொள்ளத் தீராத வேட்கையுடைய ஒரு இதயத்தின் துடிப்புகளைக் கவிதையாக வண்ணம் தீட்டியிருக்கிறார் கவிஞர் ப்ரியா பாஸ்கரன் அவர்கள் தொடர்ந்து இலக்கியத் தடத்தில் மென்மேலும் உயர்ந்திட என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.- சோலைமாயவன்
