தனியள்
தி. பரமேஸ்வரி எழுதிய 'தனியள்' கவிதையில் நட்பின் இனிமையும், தனிமையின் வலியும்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | பிரக்ஞை |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
Description
கேளிக்கைப் பொருளாய்மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சுசொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில்தோழியை அழைக்கிறீர்கள்நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும்அவளுக்குத் தெரியாதுதன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்றுமெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசைநேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறதுகுரல்கள் தடிக்கின்றனவார்த்தைகள் குழறி மோதுகின்றனதட்டில் இருக்கும் சிப்ஸும் மிக்சரும் போதாமல்தோழியின் கதைகளைப் பேசுகிறீர்கள்நம்பிக்கையோடு சொல்லப்பட்ட ரகசியங்கள்அற்ப சுவாரசியத்துக்காக பகிரப்படுகிறதுஎழுதும் கைகளின் தகர வக்கிரங்கள்கிறுக்கப்படுகின்றன சுவரெங்கும்நேசிக்கும் புத்தகங்களை இறுகப் பற்றியபடிசங்கிலியில் கட்டுண்டிருக்கும் கால்களை அறியாமல்உறங்கச் செல்கிறாள்தானே உணவானது அறியாமல்
