நாய் வால்
சங்கிலிக் கதைகளும் ஓசைக் கதைகளும்
குழந்தைகளுக்கான அழகான கதைகளின் தொகுப்பு 'நாய் வால்'. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் சிறப்பான புத்தகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | வாசல் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
Description
குழந்தைகளுக்கு வாய் மொழியாகச் சொல்லத்தக்க கதைகள். கதைகளில் சம்பவங்கள் (சங்கிலிக்கதைகள்) சங்கிலியாகத் தொடரும். குழந்தைகளின் வரிசை அறியும் திறனை (sequential skills) வளப்படுத்தும் கதைகள்.பின்னட்டைக் குறிப்பு:வீட்டுக் கல்வியை (Home Schooling) தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமான முதல் நூல் இது.மூன்று முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக்குச் சொல்லக் கூடிய கதைகள் இவை.ஒரு நாளைக்கு ஒரு கதை என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், அதைத் தீர்மானிக்கும் முடிவு உங்களிடமும் உங்கள் குழந்தைகளிடமும் மட்டுமே உள்ளது.வாய்மொழியாகச் சொல்ல வேண்டிய கதைகள் இவை. கதை சொல்லும்போது புத்தகம் குழந்தையின் மடியில் இருக்கட்டும். படங்களை அவர்கள் பார்க்கட்டும். ஆனால், வாசி! வாசி! என்று கதைகளை வாசிக்கச் சொல்லிக் குழந்தைகளைத் துன்புறுத்த வேண்டாம்.கதைகளில் உள்ளபடி ஓசை எழுப்பி, அசைவுகளை உண்டாக்கி (நடத்தல், குதித்தல் போன்றவை) கதை சொல்லப் பழகுங்கள்.குழந்தைகளின் பரவச உலகம் இது. நாய் பேசுமா? பல்லி நடக்குமா? – என்பவை போன்ற அறிவுலகக் கேள்விகளை இங்கு கொண்டு வர வேண்டாம்.
