Skip to content

கூந்தல் என்சைக்ளோபீடியா

₹145.00

கூந்தல் பராமரிப்புக்கான முழுமையான தீர்வு! ஆர். வைதேகி எழுதிய 'கூந்தல் என்சைக்ளோபீடியா' புத்தகம் உங்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும்.

Category Report
Publisher விகடன் பிரசுரம்
Language Tamil
Format Paperback
Tags Beauty , Hair Care , Health

Description

இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு? `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது!