நீங்களும் பேச்சாளர் ஆகலாம் (ஆழி பதிப்பகம்)
மேடைப் பேச்சுக்கான வழிகாட்டி! க. அன்பழகன் எழுதிய 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' புத்தகம், சிறந்த பேச்சாளராக உங்களை மாற்றும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Communication Skills , Public Speaking , Self-Improvement |
Description
மேடைப்பேச்சில் நான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஈடுபட்டுள்ளவன் எனினும், என் கருத்துகள், மதிப்பீடுகள், விழைவுகள் ஆகியவையே முற்றிலும் தகுதியுடையவை. சரியானவை என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் என்னைப்போன்றே, தனிக் கருத்துக்கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு. எனினும், இந்த நூல் பட்டறிவு வாயிலாக வடிவு கொண்டதாகலின், மேடைப்பேச்சில் ஈடுபட விழைவார்க்கும், துவக்க நிலையினருக்கும் துணையாகத் தக்க ஊன்றுகோலாம். பேச வேண்டிய கடமையும் நிலைமையும் பலருக்கும் நேருமாதலின், நாமும் பேசலாம், வாய்ப்புத் தொடரின் பேச்சாளரும் ஆகலாம். அது முடியாததல்ல என்னும் உறுதி உருவாக இந்த ஏடு பயன்படும். பயன்படவேண்டும் என்பதே எனது எண்ணம், விழைவு. படித்துப் பாருங்கள்; நீங்களும் பேச்சாளர் ஆகலாம்!-புத்தகத்திலிருந்து.
