திருப்பரங்குன்றம் – முழு வரலாற்று ஆய்வு
திருப்பரங்குன்றம் மலையின் வரலாறு, நிலவியல் மற்றும் அரசியல் பற்றிய விரிவான ஆய்வு நூல்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Archaeology , History , Tamil Culture |
Description
மதுரையில் ஆரம்பக்கலவியைப் படிக்கத் தொடங்கியது முதல், பட்டப்படிப்பை பாளையங்கோட்டையில் படிக்கச் சென்றது வரை, இளமைப் பருவம் முழுவதும் பரங்குன்றம் மலையைக் கடந்தே சென்றுள்ளேன். அதைப் பார்க்கும் போநெல்லாம் மலைக்க வைக்கும், மலைக்க வைக்கும் பலவற்றைத் தன்னுள் கொண்டுள்ளதால் மலை என்றார்களோ?நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கியது. உலகம் நோன்றிய நாள் முதல் எல்லாவற்றையும் பார்த்த அம்மலையை வைத்து சிறுமைத்தனமான காரியங்கள் நடக்கிறது. மலையும். அம்மலையினடியில் வாழும் மக்களின் வரலாறு நான் என்ன? கோடிக்கணக்கான ஆண்டுகள் முதல் இந்நாள் வரை அங்கு என்ன நடந்தது என்பதன், நிலவியல், வரலாறு, அரசியல் பார்வையே இந்நூல்.
