Skip to content

ஐந்தாம் மலை

₹150.00

ஐந்தாம் மலை நாவல், பவுலோ கோய்லோவின் தத்துவப் புனைவு. விவிலிய நிகழ்வுகளின் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த படைப்பு.

Category Novel
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
Language Tamil
Year 2017
Format Paperback

Description

உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ.பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது.முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி அவரை உலக எழுத்தாளராக மாற்றியது. அதன் விற்பனை உலக மொழிகள் பலவற்றிலுமாக விரிவுற்றபோது வாழும் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு என்ற அளவில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியது.ஐந்தாம் மலை என்ற இந்த நாவல் விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது.பவுலோ கோய்லோ வாசகனை மெல்ல மெல்லத் தன் புனைவுகள் வழி சிந்திக்க வைப்பதைக் கலையாக மேற்கொள்கிறார்.இந்தத் தத்துவப் பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் முனைவர் ச. வின்சென்ட். ஆங்கிலப் புலமையும் தமிழில் திறனும் பெற்ற பேராசிரியர் வின்சென்ட் புகழ்பெற்ற பல நூல்களை ஆங்கிலம் வழி தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர்.மதுரை அருளானந்தர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பரமார்த்த குருவின் கதை, பிரதாப முதலியார் சரித்திரம் ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.ஃப்ராய்ட், ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறுகளைத் தமிழில் தந்திருக்கிறார். வான்காரி மத்தாய், சினு அச்பி, சிகோமெண்டிஸ் ஆகிய புகழ்வாய்ந்த எழுத்தாளர் நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.