திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்
திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்: தமிழ்ச் சமூகத்தின் அரசியல், சமூக உளவியல் பற்றிய ஆழமான கட்டுரைகள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | கயல் கவின் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Film Studies , Social Sciences , Tamil Culture |
Description
தமிழ்ச் சமூகத்தின் அரசியல்-சமூக உளவியல் பற்றிய புரிதல்களை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்தவை இந்தக் கட்டுரைகள். திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற முதல் பகுதி கட்டுரைகள் கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் முன்வைத்து திரைப்படங்கள் பற்றிய சொல்லாடல்களை உருவாக்கும் முயற்சிகள். திரையில் படியாத தமிழ் மனம் என்ற இரண்டாவது பகுதி கோட்பாடுகளை, கருத்தியல்களை அரசியல் தளத்துடன் உறவுபடுத்தும் கட்டுரைகள். இவை இரண்டு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை, தொடர்ச்சியாக அமைகின்றவை, ஒரே வகையான கேள்விகளைத் தம்முள் கொண்டிருப்பவை. திரைப்படம், மக்கள் அரசியல் இரண்டும் நவீன உருவாக்கங்கள், ஊடகக் கட்டமைப்புகள், அத்துடன் இரண்டுமே தனிமனிதர்களுக்கு அதிக இடமளிக்கும் கூட்டு நினைவுகளால் அமைந்தவை. அதனால், தற்காலச் சமூக உளவியல் சொல்லாடலில் இரண்டும் இணையமைப்புகளாக மாறிவிடுகின்றன.
